தேவிபட்டினம் ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
தேவிபட்டினம் ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
ADDED : ஆக 23, 2026 12:01 AM

அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: கிழக்கு கடற்கரை சாலையும், திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையும் இணையும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தேவிபட்டினம் உள்ளது.
இவ்வழியாக ராமநாதபுரம் செல்லும் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேவிப்பட்டினத்தில் உள்ள நவபாஷாண நவக்கிரகத்திற்க தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
