ADDED : பிப் 09, 2024 04:21 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை பகுதி மீன் மார்க்கெட்டுகளில் திருக்கை மீன் வரத்து அதிகரித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடலில் கருவா, புலியன் போன்ற பல்வேறு வகையான திருக்கை மீன்கள் உள்ளன. பொதுவாக திருக்கை மீன்களில் மருத்துவ குணம் இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்வார்கள். கடந்த சில நாட்களாக திருக்கை மீன் வரத்து குறைவாக இருந்தது.
நேற்று முன்தினம் திருவாடானை மீன் மார்கெட்டிற்கு திருக்கை வரத்து அதிகமாக இருந்தது. மீன் வியாபாரிகள் கூறியதாவது: பொதுவாக திருக்கை மீன் ஏப்., மே மாதங்களில் இனபெருக்கத்திற்காக கரையோரம் வருவது வழக்கம். இதனால் சில மாதங்களாக திருக்கை மீன் தட்டுப்பாடாக இருந்தது. சில நாட்களாக திருக்கை வரத்து அதிகமாக உள்ளது என்றனர்.
