/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து அதிகரிப்பு: மல்லிகை விலை சரிவு ; கிலோ ரூ.300க்கு விற்பனை
/
வரத்து அதிகரிப்பு: மல்லிகை விலை சரிவு ; கிலோ ரூ.300க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பு: மல்லிகை விலை சரிவு ; கிலோ ரூ.300க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பு: மல்லிகை விலை சரிவு ; கிலோ ரூ.300க்கு விற்பனை
ADDED : ஜூலை 15, 2025 06:25 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூ வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்து கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தங்கச்சி மடம், மண்டபம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
பிற பகுதி நாற்றுகளை விட தங்கச்சி மடம் மல்லிகை நாற்றுகள் நன்றாக வளர்ந்து வாசனை மிகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட, மாநிலங்களுக்கும் இங்கிருந்து மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு செல்கின்றன.
மல்லிகை பூ பங்குனி, சித்திரை சீசன் காலக்கட்டத்தில் கிலோ ரூ.300க்கு விற்கிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ. 1500 முதல் ரூ.2000க்கு விற்கிறது. தற்போது மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் வெளியூர்களில் இருந்தும் இம்மாவட்டத்திற்கு மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்ற உதிரி மல்லிகை தற்போது கிலோ ரூ.300 முதல் ரூ.350 சரிந்துள்ளது.