கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு: பக்தர்கள் பாதிப்பு
கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு: பக்தர்கள் பாதிப்பு
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:00 PM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரத்திற்கு முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் கூடுதல் அளவில் பாதையை மறைத்து கடையிலே விரித்து வைத்துள்ளனர். இதனால் உற்ஸவமூர்த்தி பிரகார சுற்றும் நேரங்களில் பெரும் சிரமத்தை சந்திக் கின்றனர்.
எனவே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு ரதவீதியில் தெப்பக்குளத்திற்கு அருகே இரு புறங்களிலும் கார்களை வரிசையாக நிறுத்தி செல்வதால் அரசு பஸ்கள் சாலை கடப்பதில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
