/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு: 3.5 அடி நீர் மட்டம் உயர்வு

ADDED : நவ 04, 2024 06:30 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரியகண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கண்மாயில் 3.5 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் தொடங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கரில் அமைந்துள்ளது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீர் தேக்கமுடியும்.
கண்மாய் வறண்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு நீர் வரத்து இருக்கும்.
தற்போது வைகை அணையில் நீர் திறக்காமலே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராமநாதபுரம் கண்மாய்க்கு கடந்த ஒருவாரமாக வைகை ஆற்றில் தண்ணீர் வருகிறது.
தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 50 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கண்மாய் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீருக்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.