/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுட்டெரிக்கும் வெயிலால உப்பு உற்பத்தி அதிகரிப்பு : உப்பள தொழிலாளர் பணியில் மும்முரம்

ADDED : மே 18, 2025 12:10 AM

தேவிபட்டினம்: கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உப்பள தொழிலாளர்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம் கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பில் அயோடின் கலக்கப்பட்டு உணவுப் பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு மற்றும் தோல் பதனிடுதல் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த மாதம் உப்பு உற்பத்தி துவங்கிய நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்துள்ளதால் உப்பள பாத்தியில் தேக்கப்படும் தண்ணீர் 3 முதல் 5 நாட்களில் உப்பாக மாறுவதால் உப்பளத் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி தொழிலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் உப்புக்கு விலையும் கிடைப்பதால் தொழிலாளர்கள் முழு வீச்சில் உப்பள பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
--
--