/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரத்து அதிகரிப்பு : வசதிகள் இல்லை
/
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரத்து அதிகரிப்பு : வசதிகள் இல்லை
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரத்து அதிகரிப்பு : வசதிகள் இல்லை
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரத்து அதிகரிப்பு : வசதிகள் இல்லை
ADDED : ஜன 30, 2025 10:32 PM

திருவாடானை; திருவாடானை தாலுகாவில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரித்துள்ள நிலையில் போதிய வசதிகள் செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயப் பணிகள் முடிந்து தற்போது அறுவடை நடந்து வருகிறது.
இந்த தாலுகாவில் சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.2450ம், பொது ரகம் ரூ.2405க்கும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் ஆர்வமாக இருப்பதால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. போதிய வசதிகள் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து காங்., மாவட்ட துணைத் தலைவர் துரை. விஸ்வநாதன் கூறியதாவது:
நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் கான்கிரீட் தளம் இல்லாததால் தரையில் வைக்க வேண்டியுள்ளது. திறந்தவெளி மைதானத்தில் மூடைகளை வைத்து மழை பெய்து விட்டால் நனைந்து விடும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூடைகளை வைக்க போதிய இடவசதியும் இல்லை. விவசாயிகளை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்து மூடைகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருவெற்றியூர், பாண்டுகுடி, கடம்பூர், ஆண்டாவூரணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றார்.