/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மக்கள் அச்சம்
/
முதுகுளத்துார் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மக்கள் அச்சம்
முதுகுளத்துார் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மக்கள் அச்சம்
முதுகுளத்துார் பகுதியில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மக்கள் அச்சம்
ADDED : நவ 07, 2024 01:52 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்ச்சல் பரவி வருவதால்மக்கள் அச்சமடைந்துஉள்ளனர்.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகஅவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள்உற்பத்தியாகிறது. இந்நிலையில் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார், வெங்கலக்குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கொசு மருந்து அடிக்கவும், மருத்துவ முகாம் நடத்தவும், பருவ மழை காலம் என்பதால் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.