/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தாலுகாவில் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை
/
திருவாடானை தாலுகாவில் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை
திருவாடானை தாலுகாவில் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை
திருவாடானை தாலுகாவில் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை
ADDED : மார் 18, 2025 06:53 AM
திருவாடானை; கோடை துவங்கிய நிலையில் திருவாடானை தாலுகாவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை, தொண்டி பகுதியில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியதால் பொதுமக்களின் போராட்டமும் துவங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தேளூர் கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர். எனவே குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊராட்சி, பேரூராட்சிகளில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் வினியோகம் செய்ய போதுமான நடவடிக்கை இல்லை. நெடுஞ்சாலை ஓரங்களில் பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. தரமான குழாய்கள் பதிக்காததே இதற்கு காரணம். இதன் காரணமாகவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் சப்ளை இருப்பதில்லை. மேலும் திருவாடானை உட்பட பல்வேறு கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
இதன் காரணமாக அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே கோடை காலம் துவங்கிவிட்டதால் முன்னெச்சரிக்கையாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.