/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு : குறுகிய இடத்தில் பஸ்களை இயக்குவதால் சிக்கல்

ADDED : ஜூன் 23, 2024 03:46 AM

ராமநாதபுரம் நகராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, திருச்செந்துார், திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்பஸ்நிறுத்தும் பகுதிகளில் ஆட்டோ, கார், டூவீலர்களை நிறுத்துகின்றனர்.மேலும் அத்துமீறி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் ஆட்டோக்கள், கார்கள் வந்து செல்கின்றன. ஏராளமான டூவீலர்களை நிறுத்துகின்றனர்.
இதனால் பஸ்கள் நிறுத்தும் போதும், புறப்படும் போதும் காலதாமதம், இடையூறு ஏற்படுகிறது. ஆகையால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஏற்கனவே 'நோ பார்க்கிங்' பலகை வைத்துள்ள இடத்தில் அத்துமீறி நிறுத்தப்படும் பிற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும். நகராட்சி, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.