/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனை
/
சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனை
ADDED : ஆக 02, 2025 12:24 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆக.,15 சுதந்திர தின முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுதந்திர தின விழா அன்று தியாகிகளை கவுரவித்தல், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி தொடர்புடைய அலுவலர்கள் திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவச்செல்வம், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.