/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் பராமரிப்பு இல்லாத தியாகிகள் பூங்கா
/
நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் பராமரிப்பு இல்லாத தியாகிகள் பூங்கா
நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் பராமரிப்பு இல்லாத தியாகிகள் பூங்கா
நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் பராமரிப்பு இல்லாத தியாகிகள் பூங்கா
ADDED : ஆக 13, 2025 11:09 PM

திருவாடானை: சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படும் நிலையில் திருவாடானையில் உள்ள தியாகிகள் பூங்கா, நினைவு துாண் சுத்தம் செய்யபடாமல் உள்ளது. மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானையில் தியாகிகள் அதிகம் வாழ்ந்த ஊராக திகழ்கிறது.
1942 ஆக.,9ல் திருவாடானை சிறைச்சாலையில் அடைக்கபட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் சின்ன அண்ணாமலையை விடுவிக்க பல ஆயிரம் பொதுமக்கள் ஒன்று திரண்டு சிறைச்சாலையை உடைத்து அனைவரையும் விடுவித்தனர். அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷன், கருவூல அலுவலகம் மற்றும் சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். பெரும் போராட்டமாக நடந்த இச்சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருவாடானை தாலுகா முன்பு 2016ல் தியாகிகள் பூங்கா மற்றும் நினைவு துாண் கட்டப்பட்டது. தற்போது அந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது.
இது குறித்து பூங்கா அருகே வசிக்கும் மக்கள் கூறியதாவது:
திருவாடானையில் உள்ள தியாகிகள் பூங்கா கேட் கதவு பூட்டப்பட்டிருந்தது. இரவில் சிலர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மது அருந்தும் இடமாக மாற்றிவிட்டனர். மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. நாளை (ஆக.15) சுதந்திரதின விழா நடைபெறும் நிலையில் சுத்தம் செய்யப்படாமல் புதர்கள் மண்டியுள்ளது.
சுதந்திரதின விழாவில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் நினை விடங்களில் மலர் துாவி அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆகவே பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும்.

