/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
ADDED : ஆக 15, 2025 11:22 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நாட்டின் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ராமநாதபுரம் தினமலர் நகரில் உள்ள தினமலர் அலுவலகத்தில் காலை 8:30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் காலை 9:05 க்கு நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார்.
தேச ஒற்றுமை, அமைதி, சமாதானத்தை வலியுறுத்தி புறாக்கள், மூவர்ணக்கொடி பலுான்களை கலெக்டர், எஸ்.பி., பறக்கவிட்டனர். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களான சோமசுந்தரம் 65, சீனிவாசன் 56, கலைசெல்வம் 67, பாண்டியன் 74, மாரிமுத்து 65, தமிழ்செல்வி 60, ஆறுமுகம் 53, ஆகியோர்களை கலெக்டர் கவுரவித்தார்.
சிறப்பாக பணிபுரிந்த 75 போலீசார், 229 அரசு அலுவலர்கள் என 304 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 80 பேருக்கு 84 லட்சத்து 29 ஆயிரத்து 154 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதன்பின் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலுவலகங்கள்: சேதுபதி டென்னிஸ் கிளப்பில் நடந்த சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார். சுங்கத் துறை அலுவலகத்தில் இணை ஆணையர் உமேஷ் ரத்தோட் தேசியக் கொடி ஏற்றினார். துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் முதல்வர் அமுதா ராணி தேசியக் கொடி ஏற்றினார். கண்காணிப்பாளர் ஜவஹர், துணை கண்காணிப்பாளர் ஞானக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முரளிதரன் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் சண்முக நாதன், குமார் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட காங்., சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் நகர் மத்திய பகுதியில் திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் தேசியக் கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளர் ராஜேஸ்வரி கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தில் மூத்த உறுப்பினர் ராமசாமி தேசிய கொடி ஏற்றினார். சேதுபதி லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட கவர்னர் சுந்தரராஜன் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அமைப்பின் தலைவர் சிவராஜ் தேசியக் கொடி ஏற்றினார்.
பள்ளி, கல்லுாரிகள்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் முதல்வர் பெரியசாமி தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில் தாளாளர் சின்னத்துரை அப்துல்லா தேசியக் கொடி ஏற்றினார். செய்யது அம்மாள் செவிலியர் கல்லுாரியில் முதல்வர் ஆர்த்தி தலைமையில் நடந்த விழாவில் தாளாளர் ராசிகா அப்துல்லா கொடி ஏற்றினார். செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தேசியக் கொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வேலு மனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் தாளாளர் வேலு மனோகரன் , ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் தாளாளர் தேவ மனோகரன் மார்ட்டின், திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராமத் தலைவர் பக்திமான் தலைமையில் தலைமையாசிரியர் ராஜூ தேசியக் கொடி ஏற்றினனர். பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு பள்ளியில் மரக்கன்றுகளை நட்டனர். வெளிப்பட்டணம், எம்.எஸ்.கே. நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி தலைமையில் நகராட்சி கவுன்சிலர் மரியம் பானு முன்னிலையில் சுதந்திர தின விழா நடந்தது. கவுன்சிலர் ஜஹாங்கீர் தேசியக் கொடி ஏற்றினார். ஏர்வாடி தர்ஹா முத்தரையர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராமத் தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கலாதேவி தேசியக் கொடி ஏற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பி.டி.ஓ., கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார். பி.டி.ஓ., லிங்கம் உட்பட யூனியன் அலுவலக அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மவுசூரியா கொடியேற்றினார். செயல் அலுவலர் மாலதி உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமர்நாத் தேசிய கொடி ஏற்றினார்.
ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தேசியக் கொடி ஏற்றினார். எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷான் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மெசியானந்தி தலைமையில் பேரூராட்சி தலைவர் மவுசூரியா கொடியேற்றினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், நிர்வாகிகள் அயூப்கான், பகுர்தீன், அமீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வர்த்தக சங்கம் சார்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கொடியேற்றினார். சங்கத் தலைவர் அயூப் கான், செயலாளர் வேல்முருகன், ஜமாத் தலைவர் காஜா நஜுமுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் சரண்யா கொடியேற்றினார். தொழிலதிபர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர் ராஜேஸ்வரி தேசிய கொடி ஏற்றினார். திருப்புல்லாணி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வன்னிமுத்து தேசிய கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் ரமேஷ் குமார், பேச்சியம்மாள், அனு வினோதினி, அமுதா பங்கேற்றனர்.
பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவி கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரியாஸ்கான் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கணித ஆசிரியர் முத்துக்குமார் செய்திருந்தார். வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சண்முகநாதன் கொடி ஏற்றினார்.
கீழக்கரை நகராட்சியில் தலைவர் செஹானாஸ் ஆபிதா கொடியேற்றினார். தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் டில்லி குரு கோபிந்த் இந்திர பிரதேச யுனிவர்சிட்டி பேராசிரியர் மீனாட்சி காந்தி தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் சுமையா வரவேற்றார்.
கல்லூரி மாணவிகளின் கொடி அணிவிப்பு நடந்தது. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் கவுசிகா கொடியேற்றினார். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தேசிய கொடி ஏற்றினார். முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சேக் தாவூது கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் கொடி அணிவகுப்பு மரியாதை நடந்தது.
கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதல்வர் நிர்மல் கண்ணன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். மெரைன் இன்ஜினியரிங் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் ராஜசேகர் தேசியக்கொடி ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் செயலர் எட்வர்ட் பிரான்சிஸ் தேசிய கொடியேற்றினார். முதல்வர் சூசைநாதன் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன் நாகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆங்கிலத் துறை தலைவர் சீனி அப்துல் சமது வரவேற்றார். கணினித்துறை தலைவர் பிருந்தா நன்றி கூறினார்.
ஏர்வாடி தர்காவில் காலை 7:00 மணிக்கு மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் பாசில் உமரி தேசிய கொடி ஏற்றினார். ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். மற்றும் தர்கா கமிட்டி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நமது பாரத தேசம் உலக அரங்கில் முதன்மையாக திகழவும், சிறந்த வல்லரசாக வீறுநடை போடவும், சிறப்பு பிரார்த்தனை மற்றும் துவா நிகழ்த்தப்பட்டது.
திருவாடானை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆண்டி கொடியேற்றினார். நீதிமன்றத்தில் நீதிபதி ஆன்டனி ரிஷாந்தேவ், டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி. சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ. விஜி கொடியேற்றினனர். பி.டி.ஓ.(ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அரசு கலைக்கல்லுாரியில் முதல்வர் பழனியப்பன், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் முருகானந்தம் கொடியேற்றினர். அரசு தொடக்கபள்ளியில் தலைமைஆசிரியர் கதிரவன், வெள்ளையபுரம் அனிஷ்பாத்திமா பள்ளியில் தாளாளர் கார்த்திகேயன் கொடியேற்றினர். காரைக்குடி குருதி அறக்கட்டளை இணை செயலாளர் மணிமாறன், பள்ளி முதன்மை முதல்வர் யாஸ்மின், தலைமை ஆசிரியர் சுகந்தி கலந்து கொண்டனர். தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கொடியேற்றினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். அரசு தொடக்கபள்ளியில் (கிழக்கு) பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கவிதா உடனிருந்தனர்.
அல்ஹிலால் மெட்ரிக், முனைவரா நடுநிலைப்பள்ளி, அமீர்சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைபள்ளிகளில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கொடியேற்றினார். பள்ளி தாளாளர் அகமதுஇப்ராகிம், சலாம்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். த.மு.மு.க., அலுவலகம் முன்பு திருவாடானை வட்டார ஜமாத் செயலாளர் பாரூக் கொடியேற்றினார். த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் தேசிய கொடி ஏற்றினார். பரமக்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சபரிநாதன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வரதன் தேசிய கொடி ஏற்றினர்.
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன் கொடி ஏற்றினார். சார்பு நீதிபதி அறிவு, குற்றவியல் நடுவர் நீதிபதி ஐயப்பன், முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான், வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப் பள்ளியில் தலைவர் ராமையன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் குப்புசாமி வரவேற்றார். பள்ளி முன்னாள் மாணவர் இந்திய ராணுவ வீரர் நாகராஜன் தேசிய கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குப்புசாமி, தலைமையாசிரியை ஸ்ரீதேவி, ஆசிரியர் விமல்ராஜ் வாழ்த்தினர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
பரமக்குடி பாரதியார் நடுநிலைப் பள்ளியில் பள்ளி செயலாளர்கள் குணசேகரன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் துரைப்பாண்டி வரவேற்றார். அகில பாரதிய வித்யாத்ரி பரிசத் தேசிய மாணவர் அமைப்பு சார்பில் எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் நிர்வாகி குமரன் கொடி ஏற்றினார்.
பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் கல்விக்குழு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். பள்ளித்தாளாளர் ரெங்கன் தேசிய கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் தனசேகரன் நன்றி கூறினார். போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி உண்டு உறைவிட பள்ளியில் நிர்வாகி மாடசாமி கொடியேற்றி வைத்தார்.
முதுகுளத்துார் முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் மைக்கல் சேசுராணி தேசியக்கொடி ஏற்றினார். மாறுவேடம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாமரை தொண்டு நிறுவனம் சார்பில் பொறுப்பாளர் சகுந்தலா பரிசுகள் வழங்கப்பட்டது. இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார்.
முதுகுளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்தனவேல் தேசிய கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். துாரி கிராமத்தில் தலைமை ஆசிரியர் காளிமுத்து கொடியேற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாமரை தொண்டு நிறுவனம் பரிசுகள் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் சேர்மன் காந்திராசு, முதுகுளத்துார் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ரவீந்திரன் கொடி ஏற்றினர்.
முதுகுளத்துார் சாம்பக்குளம் அருகே கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தலைவர் தாளாளர் ஹேமலதா கொடி ஏற்றினார்.
முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க அலுவலகம் முன்பு தலைவர் கண்ணன் தலைமையில் கேப்டன் செந்துார்பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.பஸ்டாண்டில் இருந்து முக்கிய வீதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். உடன் செயலாளர் வேலு, பொருளாளர் துரைச்சாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார் காந்திசிலை அருகே சேதுசீமை பட்டாளம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கொடியேற்றப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
முதுகுளத்தூரில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அலுவலகத்தில் தர்மர் எம்.பி., கொடி ஏற்றினார். ஒன்றிய செயலாளர் சேதுராமன், ஒன்றிய துணைச் செயலாளர் உடை சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கோகுல்நாத் கொடி ஏற்றினார். மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., ஜானகி கொடி ஏற்றினார்.பி.டி.ஓ., பாலதண்டாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி.,முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி., சண்முகம் கொடி ஏற்றினார்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் சந்திர மோகன் கொடி ஏற்றினார். விளங்குளத்துார் பசும்குடில் ஆதாரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் காப்பகத்தில் அவார்டு டிரஸ்ட் செயலாளர் சின்னமருது கொடி ஏற்றினார்.மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. த.மு.மு.க., சார்பில் நகர் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் கொடி ஏற்றினார். மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முரளிதரன், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் குமரன் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ராஜா, பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கதிரேசன், பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றி ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
கமுதி கமுதி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,சந்திரசேகரன் கொடி ஏற்றினார். பி.டி.ஓ., லெட்சுமி,மேலாளர் கார்த்தி பங்கேற்றனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காதர்முகைதீன், கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அப்துல் வகாப் சகாராணி கொடி ஏற்றினர். துணைத் தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை முன்னிலை வகித்தார்.
அபிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பாத்திமா கனி கொடி ஏற்றினார் . துணைத்தலைவர் மாரி முன்னிலை வகித்தார். கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் பாபு செல்வக்கனி கொடி ஏற்றினார். கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் சங்கர் கொடி ஏற்றினார்.சத்திரிய நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் யோகேஸ்வரன் கொடி ஏற்றினார்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் முதல்வர் தர்மர் கொடி ஏற்றினார். முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஷாஜகான் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் செல்வராஜ், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
*கீழக்கரை மஹ்துாமியா மேல்நிலைப் பள்ளியில் பழைய குத்பா பள்ளி ஜமாத் உறுப்பினர் சீனி ஜகுபர், தொடக்கப்பள்ளியில் நிஜாமுதீன் தேசிய கொடி ஏற்றினர்.
மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நாதியா ஹனிபா, தொடக்கப்பள்ளி தாளாளர் மீரா சாகிபு முன்னிலை வகித்தனர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது ரிஸ்வானா, பட்டதாரி ஆசிரியர் ராமமூர்த்தி, லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயம் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தீரஜ் லட்சுமணபாரதி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கோமதி அமுதா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சிக்கல் ஊராட்சி அலுவலகத்தில் கடலாடி பி.டி.ஓ., ஜெயஆனந்தன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
துணை பி.டி.ஓ., முருகவேல், மண்டல துணை பி.டி.ஓ., ரவிக்குமார், ஊராட்சி செயலர் ஜெயபால் உட்பட துாய்மை பணியாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.