sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாவட்டங்களில் சுதந்திர தின விழா கோலாகலம்

/

மாவட்டங்களில் சுதந்திர தின விழா கோலாகலம்

மாவட்டங்களில் சுதந்திர தின விழா கோலாகலம்

மாவட்டங்களில் சுதந்திர தின விழா கோலாகலம்


ADDED : ஆக 17, 2025 12:26 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:சுதந்திர தின விழாவையொட்டி ராமநாத புரம் பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.எஸ்.ஐ., சீனிவாசன் இளமனுார் பூமடந்தை அம்மன் கோயில் வளாகத்தில் 79 மரக்கன்றுகளை நட்டார்.

நயினார்கோவில் அ.பனையூர் சண்முக நாதன் தொடக்கப்பள்ளியில் நிர்வாகி கண்ணன் கொடி ஏற்றினார்.

சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளியில் ஆயுட்காலத் தலைவர் முஹம்மது யூசப், நிர்வாகக் குழுத் தலைவர் முகம்மது ஷாஜகான் தேசியக் கொடி ஏற்றினர். முஸ்லிம் தர்ம பரிபாலன சபா தலைவர் முகம்மது தவுபிக் கரீம் தலைமை வகித்தார்.

* திருவாடானை பரமஹம்ச வித்யாலாய பள்ளி யில் உணவு பொருட்களை கொண்டு இந்திய வரைபடம் வடிவமைக்கப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை வைதேகி பங்கேற்றார்.

தொண்டியில் ஐக்கிய ஜமாத் மற்றும் நகர் ஜமா அத்துல் உலமா சபை இணைந்து சுதந்திரதின விழா நடத்தினர். சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாக வரலாறு குறித்து பேசப்பட்டது.

*பரமக்குடி நகராட்சியில் தலைவர் சேது கருணா நிதி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சபை நிர்வாக உறுப்பினர் ஜெகன்நாதன் கொடி ஏற்றினார். சபை தலைவர் பாலுசாமி தலைமை வகித்தார். இணைத் தலைவர் போஸ் முன்னிலை வகித்தார்.

பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர் நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஆனந்தன் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சக்தி தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியை தேவசேனா, சமூக அறிவியல் ஆசிரியர் இளையராஜா முன்னிலை வகித்தனர். மாணவர்களின் தேசபக்தி பாடல்கள், நடனம், பேச்சு, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. ஆங்கில ஆசிரியை சகாயலதா நன்றி கூறினார்.

பரமக்குடியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிளை நுாலகத்தில் பரமக்குடி நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் மாதவன் கொடி ஏற்றினார். வாசகர் வட்ட தலைவர் வக்கீல் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நுாலகர் நித்தியானந்தம் வரவேற்றார்.

திருப்புவனம் திருப்புவனம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.தலைமையாசிரியர்கள் இந்திரா, அனுராதா, உதவி தலைமையாசிரியர் வீரப்பன் பங்கேற்றனர்.

திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஜாஸ்மின் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

திருப்புவனம் அரியவா மாண்டிசேரி பள்ளியில் மூத்த முதல்வர் கண்ணன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். உதவி செயலாளர் அருணா, முதல்வர் தனபாலன், துணை முதல்வர் முத்துராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

திருப்புவனம் தெற்கு பள்ளியில் தலைமை யாசிரியை அமுதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார், தமிழசிரியர் தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* லாடனேந்தல் வேலம்மாள் ரெசிடென்ஷியல் பள்ளியில் முதல்வர் சன்ராபின் தேசியகொடியை ஏற்றி வைத்தார். பள்ளி நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிங்கம்புணரி வலசைபட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணப்பன் கொடியேற்றினார்.






      Dinamalar
      Follow us