ADDED : ஆக 16, 2026 11:53 PM
ராமநாதபுரம்: பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை, முஸ்லீம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லீம் சங்கம், வாலிப முஸ்லீம் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் அப்துல்வஹாப் கொடியேற்றினார்.
ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்கம் மார்பாக ஆடிட்டர் சுந்தரராஜன் அலுவலகத்தில் சங்க தலைவர் சிவராஜ் கொடியேற்றினார். செயலாளர் ராஜசேகர், பொருளாளர் ஜெயராஜ், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சேது கருணாநிதி தேசிய கொடி ஏற்றினார். துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கமிஷனர் தாமரை வரவேற்றார்.
ஏ.இ., சுரேஷ், கணக்காளர் சுதா, ஆர்.ஐ., நாகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் மதன், ஜெகதீஷ் நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
*பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் சபை தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். இணை தலைவர் போஸ் முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலாளர் தட்சிணாமூர்த்தி, இணைச் செயலாளர்கள் இளையராஜா, முத்துக்குமார் வாழ்த்தினர்.
டாக்டர் மதன் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் அல்போன்சா ஒருங்கிணைத்தார். பொருளாளர் சுதர்சன் நன்றி கூறினார்.
மீனவர்களுடன்சுதந்திர தினம் ராமேஸ்வரம்: சுதந்திர தின விழாவையொட்டி நேற்று ராமேஸ் வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றி இந்திய வீரர்கள் கொண்டாடினர். இதனை தொடர்ந்து மண்டபம் கோயில்வாடி கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களுடன் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.
கடல் பாதுகாப்பு, அந்நியர்கள் ஊடுருவலை தடுப்பது குறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
