பராமரிப்பு இன்றி சுதந்திர தின பூங்கா: சீரமைக்க வலியுறுத்தல்
பராமரிப்பு இன்றி சுதந்திர தின பூங்கா: சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 31, 2026 11:24 PM

பரமக்குடி: பரமக்குடி நகரில் சுதந்திர தின பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தினர்.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குழந்தைகள் பொழுது போக்கும் வகையில் சிறுவர் பூங்கா மற்றும் சுதந்திர தின பூங்கா உள்ளது. இங்கு குறைந்த அளவிலான விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டன. கழிப்பறை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. தொடர்ந்து பராமரிக்கப்படாத நிலையில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து வீணாகி உள்ளன.
பொழுது போக்க வரும் குழந்தைகள் ஏமாற்றுத்துடன் திரும்பும் நிலையில் உடைந்த உபகரணங் களால் காயத்துடன் செல்கின்றனர்.
நடைபாதையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்துள்ளன. இதே போல் உழவர் சந்தை அருகில் உள்ள சிறுவர் பூங்காவிலும் பல்வேறு உபகரணங்கள் உடைந்து வீணாகி உள்ளன.
ஆகவே குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ள பூங்காக்களை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
