/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இந்தியன் வங்கி கிளையில் ரூ. 2000 முதல் 4000 பிடித்தம்; அதிருப்தியில் பெரியபட்டினம் மீனவர்கள்
/
இந்தியன் வங்கி கிளையில் ரூ. 2000 முதல் 4000 பிடித்தம்; அதிருப்தியில் பெரியபட்டினம் மீனவர்கள்
இந்தியன் வங்கி கிளையில் ரூ. 2000 முதல் 4000 பிடித்தம்; அதிருப்தியில் பெரியபட்டினம் மீனவர்கள்
இந்தியன் வங்கி கிளையில் ரூ. 2000 முதல் 4000 பிடித்தம்; அதிருப்தியில் பெரியபட்டினம் மீனவர்கள்
ADDED : நவ 09, 2024 05:24 AM
பெரியபட்டினம்: பெரியபட்டினம் இந்தியன் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ள மீனவர்களிடம் ரூ.2000 முதல் ரூ.4000 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெரியபட்டினம் இந்தியன் வங்கி கிளையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதிகளவு மீனவர்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மானியமாக வழங்கிய தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பணத்தில் இருந்து ரூ.2000 முதல் 4000 வரை பிடித்தம் செய்யப்பட்டதால் ஒன்று திரண்ட மீனவர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடன் இந்தியன் வங்கிக்கு சென்று இது குறித்து முறையிட்டனர். அதற்கு வங்கி நிர்வாகத்தினர் பல மாதங்களாக தங்களிடம் பணம் பரிவர்த்தனை செய்யாததால் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பெரியபட்டினம் இந்திய கம்யூ., திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் கூறியதாவது: பெரியபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மீனவர்கள் உள்ளனர். பெரும்பாலானோர் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனவர்களின் சொந்த நிதி ரூ.1200 மற்றும் அரசு மானியம் ரூ.3300 சேர்த்து ரூ.4500 அரசின் பங்களிப்பு நிதியாக ரூ.6000 சேர்த்து ரூ.10,500 சம்பந்தப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் மீனவர்களின் வங்கி கணக்கில் ரூ.2000 முதல் 4000 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது மீனவர்களை மேலும் வேதனையடைய செய்துள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வங்கி அதிகாரிகள் மறுக்கின்றனர்.
எனவே மீனவர்களை ஒன்று திரட்டி விரைவில் இந்திய கம்யூ., சார்பில் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.