ADDED : ஜூலை 08, 2025 10:32 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் இந்திய கம்யூ., மாவட்ட மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத்தலைவர் ராதா கொடியேற்றினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜன் தியாகிகள் ஜோதியை பெற்றார். முதுகுளத்துார் செயலாளர் ஜெயசீலன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார். மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜன் வரவேற்றார்.
மாநில துணைச் செயலாளர் பெரியசாமி வாழ்த்தி பேசினார். அரசியல் அமைப்பு நிலை, வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் பெருமாள் வழங்கினார். நிதி நிலை அறிக்கையை ஜீவா வழங்கினார்.
புதிய மாவட்டக்குழு தேர்வில் மாவட்ட செயலாளராக பெருமாள், துணை செயலாளர்களாக ஜீவா, ஜெயசீலன் ஆகியோரும் பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேசிய கவுன்சில் உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி நிறைவு செய்து பேசினார்.