/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் இந்திய நுகர்வோர் கருத்தரங்கம்
/
ராமேஸ்வரத்தில் இந்திய நுகர்வோர் கருத்தரங்கம்
ADDED : ஆக 25, 2025 02:37 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இந்திய நுகர்வோர் சம்மேளனம் சார்பில் எதிர்கால வாழ்வுக்கு நுகர்வோரை தயார்படுத்துதல் எனும் கருத்தரங்கம் நடந்தது.
இந்திய நுகர்வோர் சம்மேளனம் வெள்ளி விழா, ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் 35வது ஆண்டு விழா, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 40வது ஆண்டு விழா ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்திய நுகர்வோர் சம்மேளனம் ராமேஸ்வரம் மண்டல பொதுச் செயலாளர் ஜெயகாந்தன், தலைவர் அசோகன் வரவேற்று பேசினார்கள்.
எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், நுகர்வோர் சம்மேளன நிறுவனர் ஆனந்த் சர்மா மற்றும் டில்லி, ராஜஸ்தான், உ.பி., கேரளா, புதுவையை சேர்ந்த நுகர்வோர் சம்மேளன நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று இந்திய நுகர்வோர் சம்மேளனம் சார்பில் 'எதிர்கால வாழ்வுக்கு நுகர்வோரை தயார்படுத்துதல்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் 2019ம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்தும், சமூக வலைதளத்தில் நுகர்வோர் ஏமாறுவதை தடுக்க நுகர்வோர் விழிப்புணர்வு யாத்திரை துவக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றினர்.
விழாவில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், நுகர்வோர் சம்மேளன துணைத் தலைவர் முருகன், ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்க செயலாளர் களஞ்சியம், நிர்வாகிகள் நாகராஜ், தில்லைபாக்கியம், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.