/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி உஷார்படுத்தப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள்

ADDED : ஜூலை 07, 2025 11:23 PM
ராமநாதபுரம்: இலங்கையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதால் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயல்கின்றனர்.
இதையடுத்து இந்திய கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தமிழகத்திலிருந்து போதை பொருள், சமையல் பொருட்கள், பீடி இலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை அரசு தற்போது 'கிளீன் ஸ்ரீலங்கா' என்ற நடவடிக்கையின் மூலம் தொடர் குற்றங்களில் ஈடுபடும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், விசாரணையில் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்து வருகிறது.
இதையொட்டி இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிக்குபவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கையில் உள்ள குற்றவாளிகள் வெளி நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.
அப்படி இலங்கையில் இருந்து தமிழகத்தில் ஊடுருவிய 3 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகள் ஊடுருவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.-------