/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் அலட்சியம் *சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் தொய்வு *ரூ.40 கோடி திட்டம் முடங்கியதாக மக்கள் புகார்
/
அதிகாரிகள் அலட்சியம் *சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் தொய்வு *ரூ.40 கோடி திட்டம் முடங்கியதாக மக்கள் புகார்
அதிகாரிகள் அலட்சியம் *சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் தொய்வு *ரூ.40 கோடி திட்டம் முடங்கியதாக மக்கள் புகார்
அதிகாரிகள் அலட்சியம் *சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் தொய்வு *ரூ.40 கோடி திட்டம் முடங்கியதாக மக்கள் புகார்
ADDED : செப் 29, 2024 07:25 AM

சாயல்குடி,: சாயல்குடி பேரூராட்சியில் கொண்டுவரப்பட்ட ஜல்ஜீவன் திட்டப் பணிகள் அதிகாரிகள் அலட்சியத்தால் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கியுள்ளதால் செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். நாடார் தெரு, அரண்மனை வீதி, வி.வி.ஆர்., நகர், வடக்கு தெரு, சதுரயுகவல்லி நகர், துரைசாமிபுரம், இருவேலி உள்ளிட்ட தெருக்கள் உள்ளன.
*ஜல்ஜீவன் திட்டம்:
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் வீடுகள் தோறும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது. 2023ல் துவக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்காக சாயல்குடிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை அப்பணிகளுக்கான எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் மந்த நிலையில் இருப்பதால் இத்திட்டத்தை விரைந்து முடிக்கவும், தண்ணீர் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக வி.வி.ஆர்., நகர், மகிழ்ச்சி நகர், கைலாசநாதர் கோயில் அருகே மாதவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டும் பணிகள் கிடப்பில் உள்ளது.
பணிகளை அக்., இறுதிக்குள் முடிக்க வேண்டும் என குறிப்பிட்ட நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. சாயல்குடி வணிகர் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
சாயல்குடியில் அனைவருக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கரூர் குடிநீர் திட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படகிறது. ஒன்றரை லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டும் எவ்வித பணிகளும் நடக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சாயல்குடி பேரூராட்சியில் தார் ரோடு உள்ளிட்ட எவ்வித மராமத்து பணிகளும் நடக்காமல் வைத்துள்ளனர்.
ஜல்ஜீவன் திட்டத்திற்கான குழாய்கள் பதித்த பிறகு தான் மற்ற பணிகளை துவக்க வேண்டும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே சாயல்குடி பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஜல்ஜீவன் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
---