/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்திணை பூங்கா தரைத்தளம் சேதம்: பொதுமக்கள் பாதிப்பு
/
ஐந்திணை பூங்கா தரைத்தளம் சேதம்: பொதுமக்கள் பாதிப்பு
ஐந்திணை பூங்கா தரைத்தளம் சேதம்: பொதுமக்கள் பாதிப்பு
ஐந்திணை பூங்கா தரைத்தளம் சேதம்: பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜன 18, 2024 05:47 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே அச்சடிபிரம்பில் ஐந்திணைப் பாலை நிலப் பூங்கா உள்ளது. இங்கு நடைபாதை தரைத்தளம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், சிறுவர்கள் நடந்துசெல்ல சிரமப்படுகின்றனர்.
அச்சடிபிரம்பில் கடந்த 2015ல் ரூ.5 கோடியில் பல்வேறு கட்டமைப்புகளுடன் 20 ஏக்கரில் ஐந்தினைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிய மலர்கள், பசுமை போர்த்திய புல்வெளிகள், தடாகம், வன உயிரினங்களின் சிலைகள் ஆகியவற்றை ரசித்துச் செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால் சரிவர பராமரிப்பு இல்லாதால் நடைபாதை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் பொங்கல் விடுமுறையால் பூங்காவில் குவிந்த, சுற்றுலா பயணிகள் நடந்து செல்வற்கு சிரமப்பட்டனர்.
குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
எனவே சேதமடைந்த கற்களை அகற்றிவிட்டு, பூங்காவில் புதியதாக சிமெண்ட் கற்ளால் நடைபாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.