நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணிபுரியும் எஸ்.பி., யின் தனிப்பிரிவு போலீசார் 50 பேருக்கு ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
டி.ஐ.ஜி., துரை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார்.
இதில் போலீஸ், உளவுத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளின் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வரும் தேர்தலின் போது முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது. தேர்தல் நேரத்தில் பணியாற்றும் விதம் குறித்து தனிப்பிரிவுபோலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.