/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் டூவீலர்களால் பாதிப்பு
/
சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் டூவீலர்களால் பாதிப்பு
ADDED : ஜன 11, 2024 04:15 AM
சாயல்குடி, : சாயல்குடி பேரூராட்சி பஸ்ஸ்டாண்டில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், துாத்துக்குடி, அருப்புக்கோட்டை, திருச்செந்துார், மதுரை, பரமக்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்லும் பிரதான பகுதியாக விளங்கி வருகிறது.
சாயல்குடி பேரூராட்சிக்கு சொந்தமான பஸ்ஸ்டாண்டில் ஒவ்வொரு கடைகளுக்கும் முன்பு டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன.
பஸ் நிற்கும் இடத்திலும் பயணிகள் அமரும் கட்டடத்திற்கு அருகிலும் ஏராளமான டூவீலர்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. டூவீலர்கள் திருட்டும் அடிக்கடி நிகழ்கிறது.
டூவீலரில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் பஸ் டிரைவருக்கும் வாகன ஓட்டிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.