/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலம் அருகே தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்
/
பாம்பன் பாலம் அருகே தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்
பாம்பன் பாலம் அருகே தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்
பாம்பன் பாலம் அருகே தகவல் பலகை சேதம்: விபத்து அபாயம்
ADDED : அக் 23, 2025 11:25 PM

ராமேஸ்வரம்: மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர், பிற சுற்றுலா தளங்களுக்கு திரும்பிச் செல்லும் போது சில சமயம் வழித்தடம், துாரம் தெரியாமல் குழம்புகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் இரும்பில் தகவல் பலகை ஆர்ச் உள்ளது. இந்த தகவல் பலகை உப்புக்காற்றில் துருப்பிடித்து சேதமடைந்து கீழே விழும் நிலையில் தொங்குகிறது. இதனை அகற்றாவிடில் சுற்றுலா, பக்தர்கள் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த தகவல் பலகையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.