ADDED : அக் 06, 2024 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : மேல் பனையூர்-ஆனந்துார் இரு வழிச்சாலை பணிகள் துவங்கியுள்ளது.திருவாடானை அருகே உள்ளது ஆனந்துார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் விலக்கிலிருந்து ஆனந்துார் செல்லும் சாலை ஒரு வழிச்சாலையாக உள்ளது. இச்சாலையை இரு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
முதல் கட்டமாக மேல்பனையூரில் இருந்து நத்தக்கோட்டை வரைக்கும் இரு வழிச்சாலைக்கு ரூ.2 கோடியே 92 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.
நத்தக்கோட்டையிலிருந்து ஆனந்துாருக்கு நிதி ஒதுக்கீட்டிற்கு பின்பு இரு வழிச்சாலை பணிகள் துவங்கும் என்றனர்.