ADDED : அக் 12, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி கும்பிடு மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாரணர் இயக்கம் துவக்கப்பட்டது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.
சாரணர் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவா செல்வராஜ், மண்டபம்பயிற்சி ஆணையர் செலஸ்டின் மகிமை ராஜ், பயிற்சியாளர் நாராயணன், திருப்புல்லாணி அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் சேதுபதி, வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முகம்மது இப்ராஹிம், ஆசிரியர் சாபிஹா செய்திருந்தனர். ஜமாத்தார்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாரண சாரணியராக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டது.

