/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு போக்குவரத்து கடலில் மண் ஆய்வு துவக்கம்
/
இலங்கைக்கு போக்குவரத்து கடலில் மண் ஆய்வு துவக்கம்
ADDED : டிச 21, 2024 01:55 AM

ராமேஸ்வரம்,:கப்பல் போக்குவரத்து துவக்குவதற்காக ராமேஸ்வரம் கடலில் மண் பரிசோதனை பணி துவங்கியது.
தனுஷ்கோடி -இலங்கை இடையே 1914 முதல் 1964 வரை கப்பல் போக்குவரத்து நடந்தது. 1964ல் ஏற்பட்ட புயல் பாதிப்பால் நிறுத்தப்பட்டது. அதன் பின் 1969ல் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து துவங்கியது.
இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் நடந்ததால் 1984ல் மீண்டும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சமீபத்தில் பிரதமர் மோடி- இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே சந்திப்பின் போது மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்க முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் ஏற்கனவே இருந்த துறைமுக அலுவலகம் அருகில் பயணிகளுக்கு புதிய பாலம் அமைக்க நேற்று தமிழக கடல்சார் வாரியம் சார்பில் கடலில் 30 முதல் 40 அடி ஆழத்தில் துளையிட்டு மண் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
.