/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ட்ரோன் மூலம் பருத்திக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பு
/
ட்ரோன் மூலம் பருத்திக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பு
ADDED : மார் 18, 2024 06:37 AM
பரமக்குடி : -பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தில் ட்ரோன் மூலம் பருத்திக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் திட்டத்தின் கீழ் பருத்தியில் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்து நாகு, காளிதாஸ், அழகுபாண்டி வயல்களில் தெளிக்கப்பட்டன.
10 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரோன் மூலம், ஒரு ஏக்கருக்கு ஏழு நிமிடத்தில் மருந்து தெளிக்கப்பட்டது.
நிகழ்விற்கு வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்தார்.
இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.500 அல்லது 50 சதவீதம் எது குறைவோ அதனை விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.  மருந்து மண்ணில் படாமல் இலையின் மேல் பகுதியில் படுவதால் மண்வளம் பாதுகாக்கப்படும்.
துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன், உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், சத்திரக்குடி  உதவி இயக்குனர் ராஜேந்திரன், துணை அலுவலர் வித்யாசாகர் உதவி அலுவலர் கவுசல்யா பங்கேற்றனர்.

