/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு வலியுறுத்தல்: குறுகிய ரோடு, வளைவில் விபத்தில் சிக்கும் வாகன ஒட்டிகள்

UPDATED : செப் 16, 2025 07:50 AM
ADDED : செப் 16, 2025 04:05 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் பரமக்குடி வரை 4 வழிச்சாலை உள்ளது. அதன் பிறகு இருவழிச்சாலையாக குறுகிய மும்முனை சந்திப்புகள், வளைவுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலியாவது, காயமடையும் சம்பவங்கள் தொடர்கின்றன. எனவே பரமக்குடி- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். மதுரையில் இருந்து பரமக்குடி அரியனேந்தல் எல்லை வரை 76 கி.மீ.,ல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி--ராமநாதபுரம் 36 கி.மீ., இரு வழிசாலையாக உள்ளது. இதனை நான்கு வழிச்சாலையாக மாற்றத்திட்டமிட்டு நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
தொடர்ந்து பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை உள்ள இருவழிச் சாலை பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம், உணவகங்கள் பெயரளவில் உள்ளன.
இதற்கிடையில் பரமக்குடி ---ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடியில் 46.7 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி- ராமநாதபுரம் ரோடு குறுகிய வளைவுகள், பாலத்தில் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவ்வப்போது கவிழ்ந்து விபத்துகள் நடக்கிறது. வாகன ஓட்டிகள் பலியாவது, காயமடைவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
எனவே பரமக்குடி - ராமநாதபுரம் ரோட்டில் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலை துறை நிர்வாகம் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.