/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் தமிழக அர்ச்சகர்கள் பூஜை செய்வதற்கு அனுமதிக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 20, 2025 11:37 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தமிழர் தேசம் கட்சி சார்பில் ராமேஸ்வரம் கோயிலில் கருவறைக்குள் தமிழர்கள் அர்ச்சனை, பூஜைகள் செய்திட அரசு அனுமதிக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் தற்போது வெளி மாநிலங்களை சேர்ந்த அர்ச்சகர்கள் மட்டுமே சுவாமியை தொட்டு பூஜை செய்கின்றனர்.
தமிழ் சமூகத்தை சேர்ந்த அர்ச்சகர்களை கருவறைக்குள் செல்ல அனுமதிப்பது இல்லை. எனவே தமிழகத்தை சேர்ந்த அர்ச்சகர்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
ராமேஸ்வரம் உள்ளூர் மக்களுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழியில் தரிசனம் செய்வதற்கு ஹிந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.