/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
/
டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2025 12:25 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே கருங்களத்துாரில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுவதை தொடர்ந்து கிராம மக்கள் பங்களிப்புடன் டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில் டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.
மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கிராமத்தார்கள் வலியுறுத்திய போது தொகுதி எம்.எல்.ஏ., என்று இப்பகுதிக்கு வருகிறாரோ அன்றைய தினமே டிரான்ஸ்பார்மரை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் என மின்வாரிய அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் தெரிவித்ததாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தியிடம் கேட்டபோது, ஆனந்துார் பகுதியில் வேறு பணிகள் நடைபெற்று வருவதால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்குள் டிரான்ஸ்பார்மர் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

