/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்
/
மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 16, 2025 03:07 AM
ஆர்.எஸ்.மங்கலம்:கிழக்கு கடற்கரை பகுதியில் மீனவ கிராமங்களை மையப்பகுதியாக கொண்டுள்ள உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தினர்.
கிழக்கு கடற்கரை சாலை, கடலுார், மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு மையப்பகுதியாக உப்பூர் உள்ளது. கடற்கரைப் பகுதி மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அப்பகுதி மீனவ பெண்கள் வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
உப்பூர் பகுதியில் நிரந்தரமான, அடிப்படை வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் இல்லாததால் மீன்களை விற்பனை செய்யும் மீனவர்கள் பாதிப்படையும் நிலை உள்ளது.
வெளியூர்களுக்கு கொண்டு சென்று மீன்களை விற்பனை செய்யும் நிலை உள்ளதால் மீனவப் பெண்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். எனவே உப்பூர் பகுதியை மையமாகக் கொண்டு அடிப்படை வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் அமைத்தால் அனைத்து வகை மீன்களையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் வாங்கும் நிலை ஏற்படும். எனவே அப்பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.