/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்கத்தில் உரிய நேரத்தில் கடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
கூட்டுறவு சங்கத்தில் உரிய நேரத்தில் கடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்தில் உரிய நேரத்தில் கடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கத்தில் உரிய நேரத்தில் கடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2024 05:02 AM
சாயல்குடி: மாவட்டத்தில் நெல், மிளகாய், சிறு, குறுதானியங்கள் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. விவசாயிகள் தங்களிடம் பணம் இல்லாத நிலையில் பிறரிடம் கடன் வாங்கியுள்ளனர். எனவே உரிய நேரத்தில் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடன் மற்றம் உரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் நெல், மிளகாய் மற்றும் சிறு குறு தானியங்கள் சாகுபடி நடக்கிறது. செய்யப்படுகிறது. ஆடி மாத கோடை உழவு செய்யப்பட்ட பிறகு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை உழுது நெல் விதைப்பு செய்துள்ளனர்.
விவசாயப் பணிகளை துவக்குவதற்கு முன்பாக பெரும்பாலான விவசாயிகள் தங்களிடம் பணம் இல்லாத நிலையில் பிறரிடம் கடன் வாங்கி அவற்றை கொண்டு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எனவே வேளாண்மை பணிகளின் ஆரம்ப கட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் உரிய நேரத்தில் கடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் கடன் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விவசாயி வீரக்குமார் கூறியதாவது: பயிர்களுக்கு அடி உரமாக டி.ஏ.பி. மற்றும் யூரியா உள்ளிட்டவைகளை பெறுவதற்கு கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றால் அங்குள்ள அலுவலர்கள், ஏற்கனவே கடன் பெற்றவர்கள் மற்றும் கடந்த ஆண்டு கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே உரம் வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து உரங்களை வாங்குகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.