/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வலியுறுத்தல்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வலியுறுத்தல்
மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வலியுறுத்தல்
மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 20, 2025 11:56 PM
ராமநாதபுரம் : ''கூட்டுறவு இயக்க வளர்ச்சிக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்டங்களிலுள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும்'' என தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மத்திய குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநிலத்தலைவர் தமிழரசு, பொதுச்செலாளர் சர்வேசன் ஆகியோர் தெரிவித்ததாவது:
கூட்டுறவு இயக்கம் துரித வளர்ச்சி அடைய மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்டங்களிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும்.
இவை பெரிய வங்கிகளாக மாறுவதோடு நகர வங்கிகளின் உரிமம் ரிசர்வ் வங்கியால் ரத்து செய்வது தடுத்து நிறுத்தப்படும்.
அரசிடமிருந்து தொகைகளை உரிய காலத்தில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையால் கூட்டுறவு வங்கிகள் நிதியிழப்பினை சந்திக்கிறது.
வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சத்திற்கு மேல் பெறும் நகைக் கடன்களுக்கு மாதந்தோறும் வட்டி செலுத்த வேண்டும் என்பது சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதனை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். 50 சதவீத அரசு டிபாசிட்களை கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
நகர கூட்டுறவு வங்கிகளில் 'வி சாப்ட்' மென் பொருள் குறைகளை நீக்கி வாடிக்கையாளர், வங்கி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்.
உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 என்ற நடைமுறையை ரத்து செய்து அனைத்து பணியிடங்களையும் பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வூதியர்களுக்கு ரூ.5500 வழங்குவதை குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் உயர்த்தி பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும்.
கூட்டுறவு பதிவாளர் 2024 ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி ஊதிய உயர்வு தர வேண்டும் என்றனர்.

