/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்டசபையில் பேசப்பட்ட பஸ் டிப்போ திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
/
சட்டசபையில் பேசப்பட்ட பஸ் டிப்போ திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
சட்டசபையில் பேசப்பட்ட பஸ் டிப்போ திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
சட்டசபையில் பேசப்பட்ட பஸ் டிப்போ திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2025 05:32 AM
தொண்டி: தொண்டியில் பஸ் டிப்போ அமைப்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது. இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிடாமல் செயல்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.
தொண்டியில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதத்தின் போது திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் பேசுகையில், தொண்டியில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன்.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி தருவதற்கு தயாராக உள்ளேன் என்று பேசினார். போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தொண்டியில் பஸ் டிப்போ அமைப்பதில் மாற்று கருத்து இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி மிகவும் பின் தங்கிய பகுதி. இருந்த போதும் போக்குவரத்து நிதியை கருத்தில் கொண்டு நிதி அமைச்சரின் அறிவுரை பெற்று நடவடிக்கை எடுக்கபடும். எம்.எல்.ஏ., நிதியின் கீழ் பஸ்டிப்போ அமைக்கலாம் என்றார்.
மக்கள் கூறுகையில், தொண்டியில் 15 ஆண்டுகளாக இதனை வலியுறுத்தி வருகிறோம். 2021ல் ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்துள்ளார். எனவே சட்டசபையில் பேசப்பட்டதோடு திட்டத்தை கிடப்பில் போட்டுவிடாமல் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.