/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலவயல் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
மேலவயல் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2024 08:15 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலவயல் பகுதியில் இருந்து சீனியேந்தல் செல்லும் ரோட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவனுார், மேலவயல் கிராமத்தினர் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த கிராம விவசாயிகளிடம் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதராஜன், மண்டல துணை தாசில்தார் உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராமத்தினர் ரோட்டை முழுமையாக சீரமைத்து தர வேண்டும். ரோட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராமத்தினர் கலைந்து சென்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பாலைக்குடி போலீசார் செய்திருந்தனர்.

