/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் தொகை அதிகமாக உள்ள குரூப்களை பிரிக்க வலியுறுத்தல்
/
மக்கள் தொகை அதிகமாக உள்ள குரூப்களை பிரிக்க வலியுறுத்தல்
மக்கள் தொகை அதிகமாக உள்ள குரூப்களை பிரிக்க வலியுறுத்தல்
மக்கள் தொகை அதிகமாக உள்ள குரூப்களை பிரிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2025 11:33 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மக்கள் அதிகமாக உள்ள குரூப்ளை இரண்டாக பிரித்து புதிய வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.திருவாடானை தாலுகாவில் நான்கு பிர்காக்களில் 61 வருவாய் கிராமங்கள் உள்ளன. இத்தாலுகாவில் அஞ்சுகோட்டை, டி.நாகனி, தோட்டாமங்கலம், சிறுமலைக்கோட்டை, சிறுகம்பையூர் போன்ற 10க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள் உள்ளன. மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அதிகமாக இருப்பதால் ஒரு வி.ஏ.ஓ., சமாளிக்க முடியாமல் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.
எனவே இதுபோன்ற பெரிய கிராமங்களை இரண்டாக பிரித்து, வி.ஏ.ஓ., பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வி.ஏ.ஒ. சங்க கவுரவ தலைவர் நம்புராஜேஸ் கூறியதாவது:
பேச்சில்லா கிராமங்கள் முன்பு இருந்தன. இப்போது அக்கிராமங்களை அருகில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்கள் நிர்வகிக்கின்றனர். மக்கள் தொகை, நிலபரப்பு அதிகமானதால் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை பெருகியுள்ளது. திருவாடானை தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள் உள்ளன.
எனவே தமிழகத்தில் பெரிய தாலுகாக்களை இரண்டாக பிரிப்பது போல் பெரிய கிராமங்களை இரண்டாக பிரித்து அந்த குரூப்களுக்கு புதிய வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.