/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பராமரிப்பு இல்லாத பெரிய கண்மாய் சீரமைக்க வலியுறுத்தல்! ஷட்டர் வழியாக பாசனநீர் வெளியேற்றுவதில் சிக்கல்

ADDED : ஜூலை 08, 2024 06:13 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென் கலுங்கு பகுதியில் தண்ணீர் வெளியேறும் ஷட்டர் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் நாணல் புதர் மண்டியுள்ளது. இதன்காரணமாக 3962.45 ஏக்கர் நிலங்களுக்கு முழுமையாக பாசன நீர் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டர் பகுதியை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீரால் 3962.45 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு 618 மில்லியன் கன அடி நீர் தேக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு வற்றாது. இதன் மூலம் ஒரு போக விளைச்சல் பெற முடியும்.
பெரிய கண்மாய் தென் கலுங்கு பகுதியில் அதிகாரிகள் முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாததால் கண்மாய் நிறைந்து வெளியேறும் ஷட்டர் பகுதிகளில் புற்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் கணமாய்களில் இருந்து ஷட்டர் வழியாக திறக்கப்படும் தண்ணீர் வெளியேற இடையூறாக உள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பருவ மழைக்காலம் துவங்கும் முன் ஷட்டர் பகுதியில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தண்ணீர் வெளியேறும் ரோடு பாலம் பகுதியில் நாணல் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இது தண்ணீர் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும்.
எனவே ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் உள்ள அனைத்து கலுங்குளிலும் பொதுப்பணித்துறையினர் மராமத்து பணிகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
--