/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டாம்புளி ரோட்டில் மண்ணரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
/
கூட்டாம்புளி ரோட்டில் மண்ணரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
கூட்டாம்புளி ரோட்டில் மண்ணரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
கூட்டாம்புளி ரோட்டில் மண்ணரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 04, 2024 05:27 AM

ஆர்.எஸ்.மங்கலம் : கூட்டாம்புளி செல்லும் ரோட்டோரத்தில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க,கண்மாய் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் இளையான்குடி ரோடு, கூட்டாம்புளி விலக்கிலிருந்து கூட்டம்புளி, சாத்தமங்கலம், வழியாக சேத்திடல் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோடு, வரவணி கண்மாய் கரையோரம் செல்கிறது.
தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் கண்மாய் கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு, ரோடு சேரும் சகதியுமாக மாறி வருகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். முனீஸ்வரர் கோயில் இந்த ரோட்டில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கண்மாய் கரையோரம் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் விதமாக கரையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.