/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் இசைப்பள்ளியை மீண்டும் துவங்க வலியுறுத்தல்
/
ராமநாதபுரம் இசைப்பள்ளியை மீண்டும் துவங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் இசைப்பள்ளியை மீண்டும் துவங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் இசைப்பள்ளியை மீண்டும் துவங்க வலியுறுத்தல்
ADDED : டிச 03, 2024 05:35 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செயல்பட்ட அரசு இசைப்பள்ளியை மீண்டும் துவங்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், இசை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் இசைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், இசை ஆர்வலர்கள்ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடனக்கலைஞர் பாலாஜி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் அரண்மனை கட்டடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு இசைப்பள்ளி செயல்பட்டது. இந்நிலையில் போதிய மாணவர்கள் இல்லாததால் மூடிவிட்டனர். அங்கு பணிபுரிந்தவர்களை உடுமலைக்கு மாற்றிவிட்டனர்.
ராமநாதபுரத்தில் படித்த மாணவர்கள் சிவகங்கைக்கு சென்று கலைப்பயிற்சியை தொடர்ந்து படிக்க சிரமப்படுகின்றனர். எனவே கலை-பண்பாட்டுத்துறை துவங்கப்பட்ட டிச.23ல் மீண்டும் இசைக்கல்லுாரி துவங்க வலியுறுத்தினர்.