/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பக்தர்களுக்கு கழிப்பிடம் வசதிக்கு வலியுறுத்தல்
/
பக்தர்களுக்கு கழிப்பிடம் வசதிக்கு வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2026 05:36 AM

ராமநாதபுரம்: பெரிய பட்டினம் அழகு நாயகி அம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும் என கலெக்டரிடம் ஹிந்து முன்னணியினர் மனு அளித்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:
கீழக்கரை அருகே பெரியப்பட்டினம் கிராமத்தில் அழகு நாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நடக்கும் திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி வழிபடுவர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக கழிப்பறை கட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அலுவலரிடம் அனுமதி கேட்டோம்.
அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். கோயில் வளாகத்திற்குள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு அனுமதி வழங்க கலெக்டரிடம் மனு அளிக்கவுள்ளோம் என்றார்.

