/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதலீடு பணத்தை வட்டியுடன்வழங்க மக்கள் வலியுறுத்தல்
/
முதலீடு பணத்தை வட்டியுடன்வழங்க மக்கள் வலியுறுத்தல்
முதலீடு பணத்தை வட்டியுடன்வழங்க மக்கள் வலியுறுத்தல்
முதலீடு பணத்தை வட்டியுடன்வழங்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2024 12:03 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த மக்கள் தனியார் (பி.ஏ.சி.எல்.,)நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றிய பணத்தைவட்டியுடன் பெற்றுத்தர அரசு உதவவேண்டும் என கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைதலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பி.ஏ.சி.எல்., (PACL) என்றநிறுவனத்தில் ரூ.49,100 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு பணத்தை குறிப்பிட்ட காலத்தில்வழங்காததால் மேற்படி நிறுவனம் செயல்பட தடைவிதிக்க வேண்டிசெபி அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
உச்சநீதிமன்றம் அந்நிறுவன சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க2016ல் உத்தரவிட்டது.
ஆனால் திருப்பி தராமல் காலதாமதம் செய்கின்றனர். எனவே வட்டியுடன் முதலீட்டு பணத்தை திரும்ப கிடைக்க உச்சநீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.