/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோட்டார் வாகன ஆய்வாளர் கமுதி பஸ்களில் ஆய்வு
/
மோட்டார் வாகன ஆய்வாளர் கமுதி பஸ்களில் ஆய்வு
ADDED : அக் 18, 2024 05:10 AM

கமுதி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கமுதி பஸ்களில் பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மப்பிரியா ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி வழியாக தேரிருவேலி கிராமத்திற்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பஸ்ஸில் மாணவர்கள், மக்கள் படியில் தொங்கிய படியும். பஸ் கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து கமுதியில் பஸ்ஸில் பயணம் செய்வது குறித்து பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பத்மப்பிரியா ஆய்வு செய்தார்.
அப்போது கமுதி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று படிகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்கிறார்களா ஆய்வு செய்தார்.
பின்பு படியில் தொங்கியபடி சென்றால் டிரைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும். அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.