/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் மாவட்டகணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
/
ரேஷன் கடைகளில் மாவட்டகணிப்பாய்வு அலுவலர் ஆய்வு
ADDED : ஜன 13, 2024 04:21 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள்வழங்கும் பணியை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தார்.
மாவட்டத்தல் ஜன.10 முதல் பொதுவினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள், ரொக்கம் ரூ.1000, வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.
நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ராமநாதபுரம் பாரதிநகரில் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகளுக்கு லோடு வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக மக்கள் புகார் கூறினர். உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மனோகரன், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஜோதிபாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.