ADDED : பிப் 07, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ரூ.96 லட்சத்தில் தார் ரோடு புதுப்பித்தல் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
திருவாடானை அருகே மாநில நெடுஞ்சாலை குருந்தங்குடி முதல் வட்டாணம் ரோட்டிற்கு ரூ.46 லட்சம், டி.நாகனி முதல் அல்லிக்கோட்டை ரோட்டிற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்து முடிந்தது.
ரோட்டின் இரு பக்கமும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு ரோடு புதுப்பிக்கப்பட்டது.
நடந்து முடிந்த இப்பணிகளை நேற்று கோட்டப் பொறியாளர் பிரசன்னா, உதவி கோட்டப் பொறியாளர் ரங்கபாண்டியன், உதவி பொறியாளர் கீதா, இளநிலை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் ரோட்டின் நீளம், அகலம், தடிமன் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

