/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரம் கிராம தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தல்
/
ரெகுநாதபுரம் கிராம தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தல்
ரெகுநாதபுரம் கிராம தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தல்
ரெகுநாதபுரம் கிராம தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தல்
ADDED : ஜன 27, 2025 05:22 AM
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஊராட்சி மேற்குத்தெரு, பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட தெருக்களில் பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக 24 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரெகுநாதபுரம் முக்கிய சாலைகள் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் நகரில் நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை கண்டறிந்து குற்ற செயல்களை தவிர்க்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
செங்குந்த முதலியார் சமுதாய மக்களின் சார்பில் கேமராக்கள் ரூ.3 லட்சத்திற்கு வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன.
ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஸ் தலைமை வகித்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா உள்ள அறையை திறந்து வைத்தார். திருப்புல்லாணி, கீழக்கரை சரக போலீசார் பங்கேற்றனர். இப்பகுதியில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.