ADDED : ஜூலை 10, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பாரதிநகர் பாரத ஸ்டேட் வங்கி சார்பில்விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் காப்பீடு தொகைவழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே கோழிகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்42. இவர் 2024ல் டூவீலர் விபத்தில் இறந்தார். இவர் பாரதிநகர் பாரதஸ்டேட் வங்கி கிளையில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி ரூ.20லட்சத்திற்கு விபத்து காப்பீடு செய்திருந்தார்.
அதற்குரியகாசோலையை வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளர்ஸ்டான்லி ஜோன்ஸ், முதன்மை மேலாளர் கிரிஷாகன் ஆகியோர்ராஜேந்திரன் மனைவி பாண்டிசெல்வியிடம் வழங்கினர்.முதன்மை மேலாளர் செல்வக்குமார், ராமநாதபுரம் கிளை உதவி மேலாளர்  சக்தி முருகானந்தம், ஜெனரல் இன்சூரன்ஸ் மனோஜ்குமார் பங்கேற்றனர்.

