/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராஜயோக தியான நிலையத்தின் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி
/
ராஜயோக தியான நிலையத்தின் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி
ராஜயோக தியான நிலையத்தின் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி
ராஜயோக தியான நிலையத்தின் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி
ADDED : செப் 27, 2025 11:30 PM
கீழக்கரை: பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் உலகளாவிய ஆன்மிக சமுதாய தொண்டு நிறுவனம். இது ராஜஸ்தானில் உள்ள மவுன்ட் அபுவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் கீழ் கல்வி, மருத்துவம், நீதி, கிராமப்புற மேம்பாட்டு துறை உள்ளிட்ட 21 துறைகளைக் கொண்டு ஆன்மிக மற்றும் சமூக தொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
ஏர்வாடியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மனநல காப்பக மறுவாழ்வு இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் ராஜயோக தியான நிலையத்தின் பொறுப்பாளர் சகோதரி ராஜலட்சுமி ஒருங் கிணைத்து நடத்தினார்.
திருப்புல்லாணி, புத்தேந்தல், ஓரிக்கோட்டை, தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள், கிராம முக்கியஸ்தர்களுக்கு திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதியை வளர்ப்பதற்காக எளிய முறையில் தியான பயிற்சி களும் கற்பிக்கப்பட்டது. சிந்திக்கும் திறனை வளர்க்க ஓவியம் வரைதல், இசை கேட்டல் உள்ளிட்டவைகளும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை ராஜயோக தியான நிலைய பயிற்சியாளர்கள் செய்து இருந்தனர்.