/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரம்
/
தேவிபட்டினம் பகுதியில் நெல் விதைப்பு பணி தீவிரம்
ADDED : அக் 09, 2024 04:28 AM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் பகுதியில் நெல் விதைப்பு பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் வட்டாரங்களில் நெல் விதைப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கழனிக்குடி, இலந்தை கூட்டம், கோப்பேரிமடம், மாதவனுார், நாரணமங்கலம், சிங்கனேந்தல், கூட்டாம்புளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் வெளியூர் டிராக்டர்கள் முகாமிட்டு உழவுப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.